close
Choose your channels

விஜய் 60' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை

Thursday, August 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக அபர்ணா வினோத் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு நடிகை இந்த படத்தில் இணைந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
பிரபல வங்காள நடிகையும் தமிழில் 'டூரிங் டாக்கீஸ்' மற்றும் 'ஓய்' ஆகிய படங்களில் நடித்தவருமான Papri ghosh தற்போது விஜய் 60' படத்தில் இணைந்துள்ளதாகவும், இவருக்கு விஜய்யுடன் ஒரு பாடலும், ஒருசில காட்சிகளும் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் 'விஜய் 60' படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.