close
Choose your channels

விஜய்யின் 61-வது, 62-வது படங்களை இயக்குபவர்கள் யார்?

Tuesday, April 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 59வது படமான 'தெறி' நாளை மறுநாள் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் அவருடைய 60வது படத்தின் பூஜையுடன் கூடிய படத்தொடக்கவிழாவும் நேற்று வெற்றிகரமாக நடந்தது. இந்நிலையில் விஜய்யின் 61வது மற்றும் 62வது படங்களை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய்யின் 61வது படத்தை இயக்க மீண்டும் அட்லிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் விஜய் படத்தை மீண்டும் இயக்கவுள்ளதாக அட்லி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிப்பில் அட்லி இயகக்த்தில் 61வது படம் முடிந்த பின்னர் அவருடைய 62வது படத்தை ஆர்.டி.நேசன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'ஜில்லா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'ஜில்லா' படத்தை இயக்கிய பின்னர் நேசன் வேறு எந்த படத்தையும் இதுவரை இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay is Superstar : Dhilip Subbarayan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.