close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் 'பிகில்' விஜய்யின் ஐடி கார்டு

Monday, July 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் விஜய், அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து தெரிய வந்தது. மேலும் அப்பா விஜய் கேரக்டரின் பெயர்தான் 'பிகில்' என்றும் மகன் விஜய்யின் கேரக்டர் 'மைக்கேல்' என்பதும் மைக்கேல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய்யின் மைக்கேல் கேரக்டருக்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சியாளர் ஐடி கார்டு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல் என்ற பெயரும், தலைமை பயிற்சியாளர் என்றும் ஐடி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இதனை ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.