close
Choose your channels

விஜய்யின் 'லியோ' படத்தின் மாஸ் தகவல்.. இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் படப்பிடிப்பு..!

Thursday, May 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ஆதித்யராம் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

25 நாட்கள் நடைபெறும் இந்த படபிடிப்பை முடித்த உடன் நேராக கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாகவும் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத் விமான நிலையத்திலும், ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஐதராபாத் படப்பிடிப்புடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் அதன் பிறகு இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.