close
Choose your channels

மூன்று வெற்றிப்பட இயக்குனர்கள்: விஜய் எடுத்த மாஸ் புகைப்படம்

Saturday, February 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் படங்களை இயக்கிய 3 இயக்குனர்கள் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தலைமை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அட்லி, விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி உள்ள நெல்சன் ஆகிய மூவரும் இணைந்த புகைப்படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் சிறப்பு என்னவெனில் இந்த புகைப்படம் விஜய்யே எடுத்தது என்பதாகும்.

இந்த புகைப்படம் வேற லெவலில் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்க்கு வெற்றி படங்களை கொடுத்த மூன்று இயக்குனர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.