close
Choose your channels

விஜய்-சங்கீதா தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து

Tuesday, August 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக இளையதளபதி விஜய் குறித்து எந்த செய்தி வந்தாலும் அது உடனே சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது. டீசர் வெளியீடு, பாடல் வெளியீடு, டிரைலர் வெளியீடு, டிரைலரின் பார்வையாளர்கள் மில்லியன் கணக்கை தொட்டது மற்றும் டிரைலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது என அனைத்து விஜய் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை முதல் விஜய்யின் இன்னொரு செய்தி டிரண்ட் ஆகி வருகிறது. அதுதான் விஜய்யின் திருமண நாள்.

ஆம் விஜய்-சங்கீதா தம்பதிக்கு இன்று 16வது திருமண நாள். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சஞ்சய், திவ்யா என்ற இரண்டு குழந்தைகளுடன் இன்றைய திருமண நாளை கொண்டாடும் விஜய்-சங்கீதா தம்பதிக்கு நமது மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

விஜய்-சங்கீதா திருமண நாளுக்கு #HappyWeddingAnnivMrandMrsVijay என்ற ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உருவாக்கி அதை அகில இந்திய அளவில் டிரண்டாக்கி தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய்க்கு திரையுலக பிரபலங்களும் நேரிலும், போனிலும், சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.