close
Choose your channels

விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் அஞ்சலி

Monday, April 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய்சேதுபதியுடன் அஞ்சலி நடித்த 'இறைவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்திற்காக இந்த வெற்றி ஜோடி இணைந்துள்ளது

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார், அடுத்ததாக இயக்கவுள்ள படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் நாயகியாக அஞ்சலி நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் வில்லனாக லிங்காவும், இன்னொரு முக்கிய கேரக்டரில் விவேக் பிரசன்னாவும் நடிக்கவுள்ளனர்.

இன்னும் பெயரிடப் படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் இசையில் உருவாகும் இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் ராஜராஜன் இணைந்து தயாரிக்க்கின்றனர். இந்த படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஆக்சன் அதிரடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.