close
Choose your channels

அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

Thursday, August 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே பிஸியான நடிகர் விஜய் சேதுபதி என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். அவர் நடித்து முடித்த படங்கள் மற்றும் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் என சுமார் 15 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளி வந்ததை பார்த்தோம்.

இதனை அடுத்து விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதேபோல் விஜய் சேதுபதி நடித்த மற்றொரு படமான ’கடைசி விவசாயி’ சோனி லைவ் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடித்த ’அனபெல்லா சேதுபதி’ என்ற படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் நடித்த 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.