close
Choose your channels

2 பாகங்களில் முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படம்.. விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்..

Thursday, August 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தில் சித்தராமைய்யா கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் உள்பட இந்திய மொழிகளில் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் சித்தராமைய்யா மீண்டும் முதலமைச்சர் ஆனார்.

இந்த நிலையில் சித்தராமைய்யா வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை சத்ய ரத்தினம் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சித்தராமைய்யா கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் அவருடைய குழந்தை பருவம், இளமை பருவம் ஆகிய காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் முதல் பாகத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவது பாதியில் சித்தராமைய்யா அரசியல் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருக்கும் என்பதால் இரண்டாவது பாதியில் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.