close
Choose your channels

'நாளைக்கு நான் ஊருக்கு போகணும்'.. பிரபுதேவாவின் 60வது படம் 'வுல்ஃப்'  டீசர்..

Thursday, August 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா நடித்து வரும் 60வது திரைப்படமான ‘வுல்ஃப்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பிரபுதேவா நடிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது திரில் காட்சிகளுடன் கூடிய டீசர் வெளியாகி உள்ளது.

ஒரு நிமிடம் கொண்ட இந்த டீசரில் பெண் சாமியார்கள் இருக்கும் ஒரு மர்மமான இடத்தில் பிரபுதேவா மாட்டிக் கொள்வதும் அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடித்து அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், திகில் காட்சிகள் சஸ்பென்ஸ் ஆகியவை கொண்ட இந்த படத்தின் டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் இந்த படம் அம்பரீஷ் இசையில் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் கிஷோர் படத்தொகுப்பு பணியில் உருவாகி உள்ளது.

பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சு குரியன், ஸ்ரீ கோபிகா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.