close
Choose your channels

மீண்டும் விஜய்சேதுபதியுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் த்ரிஷா

Sunday, September 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான '96' திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா மீண்டும் இணைந்து நாளை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிபு நாளை முதல் வாரணாசியில் நடைபெறவுள்ள நிலையில் இந்த படப்பிடிப்பில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷாவும், இந்த படத்தின் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியும் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் த்ரிஷா ஆகிய இரண்டு நாயகிகள் இருந்தபோதிலும் இருவரும் இணைந்த காட்சிகள் படத்தில் இல்லை என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.