close
Choose your channels

உதயநிதி ஸ்டாலின் கேரக்டரை கையில் எடுத்த விஜய்சேதுபதி

Saturday, May 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிக்கவுள்ள 'றெக்க' படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதை பார்த்தோம். விஜய்சேதுபதியுடன் முதன்முதலாக லட்சுமிமேனன் ஜோடி சேரும் இந்த படத்தை ரத்தினசிவா இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அருண்விஜய் நடித்த 'வா டீல்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விஜய்சேதுபதி இந்த படத்தில் வக்கீலாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் 'மனிதன்' படத்தில் உதயநிதி ஸ்டாலின் வக்கீலாக நடித்து நல்ல விமர்சனம் பெற்றதை அடுத்து அதே வக்கீல் வேடத்தை விஜய்சேதுபதி கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்மேன் புரடொக்ஷன்ஸ் கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் வில்லனாக ஹரிஷ் உத்தமனும் காமெடி கேரக்டரில் சதீஷ் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.