close
Choose your channels

விஜய்சேதுபதி பட ஹீரோயின் இன்ஸ்டாகிராம் முடக்கம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

Monday, February 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதியுடன் 8 திரைப்படங்களில் நடித்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ‘ரம்மி’ ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதகாதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ ’துக்ளக் தர்பார்’ ’மாமனிதன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் ஹேக்செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில இணைப்புகள் அவரது கணக்கிலிருந்து அனுப்பப்பட்டு வருவதாகவும் அந்த இணைப்புகளை யாரும் கிளிக் செய்யவேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே தமிழ் சினிமா பிரபலங்களான பார்த்திபன், குஷ்பூ, அமிர்தா ஐயர் உள்பட ஒருசிலரது சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த பட்டியலில் காயத்ரியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.