close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'ஆரஞ்சு மிட்டாய்' சென்சார் விபரங்கள்

Tuesday, June 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவராக விளங்கும் விஜய் சேதுபதி முதல்முதலாக தயாரித்து நடித்த திரைப்படம் ஆரஞ்சுமிட்டாய். இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு 'யூ'சர்டிபிகேட் பெற்றுள்ளது. இதனால் படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல் வெளியீடு நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூலை 3ஆம் தேதி ரிலீஸ் ஆவதாகவும், படம் வரும் ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், அஷ்ரிதா மற்றும் ஆறுமுகம் பாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜு விஸ்வநாத் என்பவர் இந்த படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆங்கிலம் உள்பட இந்தி, உருது, ஐரிஷ், ஜப்பானிஷ், இத்தாலியன் என பல மொழிகளில் திரைப்படங்கள் இயக்கி பல சர்வதேச விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.