close
Choose your channels

ரஜினிகாந்த் மிஸ் செய்த படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

Saturday, April 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்தி வந்து இரண்டு நாள் தான் ஆகியுள்ளது. அதற்குள் தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது

காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டனுடன் ஏற்கனவே விஜய்சேதுபதி, 'ஆண்டவன் கட்டளை' என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைகிறார்

இந்த படத்திற்கு 'கடைசி விவசாயி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், தற்போதைய தமிழக விவசாயிகள் நிலை குறித்து இந்த படம் பேசும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க முதலில் ரஜினியைத்தான் இயக்குனர் மணிகண்டன் அணுகியதாகவும், ஆனால் ஒருசில காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது அந்த கேரக்டரில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.