close
Choose your channels

விஜய்சேதுபதியின் றெக்கைக்கு பூஜை

Friday, May 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. 'நானும் ரவுடிதான்', 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்' என ஹாட்ரிக் வெற்றி படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'இறைவி', மற்றும் 'தர்மதுரை' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அவர் நடித்து வரும் 'ஆண்டவன் கட்டளை' படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.


இந்நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள மற்றொரு படமான 'றெக்க' படத்திற்கு சென்னையில் பூஜை போடப்பட்டுள்ளது. விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கும் இந்த படத்தை ரத்தினசிவா இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். சதீஷ் இந்த படத்தின் காமெடி வேடத்தை ஏற்றுள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். விஜய்சேதுபதியின் 'ஆரஞ்சுமிட்டாய்' படத்தின் இணை தயாரிப்பாளர் கணேஷ் இந்த படத்தை தயாரிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.