close
Choose your channels

விஜய் விருதுகள் விழாவில் விருதுகளை அள்ளிய 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்!

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவியில் விஜய் டெலிவிஷன் விருதுகள் வழங்கப்படும் என்பதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக இந்த விழா நடை பெறவில்லை என்பதால் அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி தாமதமாக தற்போது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அனைவர் மனதையும் கவர்ந்த ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூன்று விருதுகளை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Trending Pair என்ற விருது அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது என்பதும், ஃபேவரைட் நிகழ்ச்சி என்ற விருது ’குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது என்பதும், சிறந்த காமெடியன் விருது புகழுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’ராஜா ராணி’ என்ற நிகழ்ச்சியில் நாயகியான ஆலியா மானசாவுக்கு சிறந்த மருமகள் விருதும், சிறந்த அப்பா விருது மனோகர் என்பவருக்கும் சிறந்த வில்லி விருது ’பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்து வரும் பரீனாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவரும் ஹேமாவுக்கும், சிறந்த இயக்குனர் விருது பாரதிகண்ணம்மா, ராஜா ராணி தொடர்களை இயக்கிய பிரவீன் பென்னட் அவர்களுக்கும் வழங்கப்பட்டது

மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது செந்தூரப்பூவே சீரியலில் நடித்த நிவாஷினிக்கும், சிறந்த அம்மா விருது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் சுசித்ராவுக்கும், சிறந்த நாயகி விருது பாரதி கண்ணம்மா நாயகி ரோஷினிக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.