close
Choose your channels

மகனின் 10வது பிறந்த நாளை கொண்டாடிய விஜய் பட நாயகி.. அன்பு முத்தங்களின் புகைப்படங்கள்..!

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நடிகை ரீமாசென் தனது மகனின் 10வது பிறந்த நாளை ஒட்டி மகனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கௌதம மேனன் இயக்கிய ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகர் ரீமாசென். இதனை அடுத்து அவர் விஜய் நடித்த ’பகவதி’ விக்ரம் நடித்த ’தூள்’ கார்த்தி நடித்த ’ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை ரீமாசென் கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரண்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மகனுக்கு இன்று 10வது பிறந்த நாளை முன்னிட்டு இது குறித்த புகைப்படங்களை ரீமாசென் பதிவு செய்துள்ளார்.

அதில் மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் சிறுவயதிலிருந்து எடுக்கப்பட்ட மகனின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதை அடுத்து ரீமாசென் மகனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.