close
Choose your channels

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த நடிகரா?

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த், சுகன்யா நடிப்பில், இளையராஜா இசையில், ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சின்னக்கவுண்டர்’. இந்த படம் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் பாடல்கள் திரைக்கதை மற்றும் விஜயகாந்த் சுகன்யாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் ’சின்னக்கவுண்டர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்க ஆர்வி உதயகுமார் திட்டமிட்டிருந்தார். விஜயகாந்த் கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்கவைக்க அவர் முயற்சித்தபோது அது நடைபெறவில்லை.

இந்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos