close
Choose your channels

உருமாறி உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்: 'கோப்ரா' டிரைலர்

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இந்த டிரைலரில் விக்ரமின் விதவிதமான கெட்டப் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவரும் வகையில் உள்ளது. கமல்ஹாசனின் ’தசாவதாரம்’ படத்தை விட அதிகமான கெட்டப்புகளில் விக்ரம் இந்த படத்திற்காக போட்டு இருக்கிறார் என்பதும் அவரது ஒவ்வொரு கெட்டப்பும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், வெளிநாட்டு பிரமாண்ட காட்சிகள், சேசிங் காட்சிகள் ஆகியவை இந்த படத்தின் பிளஸ்களாக அமைந்து உள்ளன. இசைப்புயல் ஏஆர் ரகுமானின் பின்னணி இசை மற்றும் ஹரிஷ் கண்ணனின் கேமரா படத்தின் ஹைலைட்டாக உள்ளது.

மொத்தத்தில் ‘கோப்ரா’ டிரைலர் ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.