close
Choose your channels

விக்ரம் பிரபுவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: நாயகி யார் தெரியுமா?

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி மற்றும் இயக்குனர் குறித்த தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு, ‘கும்கி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அரிமா நம்பி ,வெள்ளைக்கார துரை, சிகரம்தொடு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர், ‘பாயும் புலி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது.

விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் ’டைகர்’ என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகிய ஏற்கனவே ’வெள்ளைக்கார துரை’ என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளனர் என்பது தெரிந்ததே.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.