close
Choose your channels

சுசீந்திரனின் 'வில் அம்பு' ஒரு முன்னோட்டம்

Thursday, February 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வெண்ணிலா கபடிக்குழு' என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு' 'ஜீவா' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வில் அம்பு'

வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' போன்ற படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ முக்கிய வேடத்திலும், யுத்தம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன் போன்ற படங்களில் நடித்த நடிகை 'ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ள படம்தான் 'வில் அம்பு'

இந்த படத்தின் ஹீரோ ஸ்ரீ தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பனை செய்பவராக நடித்துள்ளதாகவும், அஜித் நடித்த என்னை அறிந்தால்' படத்தின் பிளாக் டிக்கெட்டை விற்பது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் பிரிமியர் காட்சி பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளனர். எனவே அஜித்தின் என்னை அறிந்தால்' போஸ்டர் திரையரங்கில் தோன்றும்போது தியேட்டரே உற்சாகத்தில் அதிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமது வாழ்க்கை நமது கையில் இல்லை. நம்மை சுற்றி இருப்பவர்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றனர் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அழுத்தமான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் தெளிவாக விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் நவீன் இசையில் உருவாகியுள்ள மூன்று பாடல்களை மூன்று முன்னணி இசையமைப்பாளர்களான அனிருத், ஜி.வி.பிரகாஷ் மற்றும் டி.இமான் ஆகியோர் பாடியுள்ளது இந்த படத்தின் பாடல்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.

பிரிவியூ காட்சியை பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு எவ்வகையான வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்துள்ளது என்பதை நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.