close
Choose your channels

தொடரும் கொலைகள், தீராத மர்மம்,  தூங்கா தேடல்: விமலின் 'விலங்கு' டிரைலர்

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமல் நடித்த வெப் தொடரான ‘விலங்கு’ வரும் 18 ஆம் தேதி ஜீ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் ‘விலங்கு’ வெப்தொடரின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விமல் ஒரு கொலை குற்றவாளியை கண்டு பிடிக்க முயற்சிப்பதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் தான் இந்த வெப்தொடரின் கதை என இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், திரில்லிங் காட்சிகள், கிராமத்து காட்சிகள் என மிகச் சிறப்பாக இந்த தொடர் அமைந்துள்ளது என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

பிரசாந்த் பாண்டியராஜன் என்பவர் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார் விமலுடன் இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த டிரைலரை சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டிரைலர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.