close
Choose your channels

விமல்-நந்திதாவின் 'அஞ்சல' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, February 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டு விமல் நடித்த 'காவல்' என்ற ஒரே படம் மட்டுமே வெளியாகி சுமாராக ஓடிய நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'அஞ்சல' படம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிலீஸூக்கு தயாராகியிருந்ததாக செய்திகள் வெளியாகியது.


தொடர்ந்து பிரபல நடிகர்களின் படங்கள் வெளியானதால் தள்ளிப்போய்க்கொண்டிருந்த 'அஞ்சல' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதோடு, இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

விமல், நந்திதா, பசுபதி, இமான் அண்ணாச்சி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தங்கம் சரவணன் இயக்கியுள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.