close
Choose your channels

அர்ஜூன் படத்தில் நடிகர்களாக அறிமுகமாகும் 2 பிரபல நடிகர்களின் தந்தைகள்!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜூன் நடிக்கும் படத்தில் இரண்டு பிரபல நடிகர்களின் தந்தைகள் அறிமுகமாக இருப்பதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சன் கிங் அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் ஜிகே ரெட்டி மற்றும் லோகு ஆகிய இருவர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். பிரபல நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி என்பதும், அதேபோல் பிரபல நடிகர் கதிரின் தந்தை லோகு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே படத்தில் இரண்டு பிரபல நடிகர்களின் தந்தைகள் அறிமுகமாக இருப்பது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் லட்சுமண் என்பவர் இயக்கத்தில் அருள் குமார் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.