close
Choose your channels

உயிருக்காக போராடும் காமெடி நடிகருக்கு விஷால் செய்த நிதியுதவி

Thursday, August 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுமார் 900 படங்களுக்கும் அதிகமான தமிழ் படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உயிருக்கு போராடியவாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அல்வா வாசு சிகிச்சைக்கு தேவையான நிதியுதவியை கோலிவுட் திரையுலகினர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷால், முதல்கட்டமாக நடிகர் சங்கத்தில் இருந்து ரூ.20,000 பணத்தை அவருடைய மனைவியின் வங்கிக்கணக்கில் செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் அவர் தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்யவுள்ளதாகவும், அவர் மட்டுமின்றி மற்ற நடிகர், நடிகைகளும் நிதியுதவி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் அல்வா வாசு குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.