close
Choose your channels

'சண்டை போடலைன்னா நம்மளையும் கொன்னுருவாங்க': 'வீரமே வாகை சூடும்' டிரைலர்!

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

மீண்டும் விஷால் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது. இந்த டிரைலரில் உள்ள ஒருசில வசனங்களில் இருந்தே இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

தன்னுடைய உயிரை பாதுகாக்க வேறு வழியே இல்லாமல் கொலை செய்தவனுக்கும் மற்றவர்களை கொலை செய்து உயிர் வாழனும்ன்னு நினைக்கிறவனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது

ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதை விட அந்த குற்றம் எந்த கண்ணோட்டத்தில் நடந்தது என்று பார்ப்பது தான் ஒரு நல்ல போலீஸ்காரனுக்கு அழகு

நம்மை காப்பாற்ற ஒருவன் இருக்கிறான் என்று நினைக்கிறதால் தான் குற்றவாளிகள் உருவாகிறார்கள்

நான் ஒரு எலி என்னால் முடிந்த அளவு நான் போராடுவேன், நாளை ஒரு ஆட்டுக்குட்டி பாதிக்கும், அதனால் முடிந்த அளவு போராடும் அப்புறம் ஒருநாள் சிங்கம் பாதிக்கும். எலி, ஆட்டுக்குட்டி, நரி எல்லாத்தையும் கொல்லலாம், ஆனால் சிங்கத்தை யாராலும் கொல்ல முடியாது

’சண்டை போடலைன்னா நம்மளையும் கொன்னுருவாங்க’

ஆகிய வசனங்கள் இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு, பாபு ராஜ், குமரவேல், ரவீனா ரவி, மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை து.பா.சரவணன் இயக்கி உள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.