நடிகர் விஷால் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது திருமணம் குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் அனிஷாவை விஷால் திருமணம் செய்யவிருப்பதாகவும், விரைவில் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், அன்றே திருமண தேதியை இருவீட்டார் முடிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிவடையவுள்ள நிலையில் விஷாலின் திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

 

More News

முடிந்தது ஒரு வருடம்: கட்சி ஆரம்பிக்க ரஜினி தாமதம் செய்வது ஏன்? பழ கருப்பையா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகவும், ஆன்மீக அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும்

'விஸ்வாசம்' படத்தை புரமோஷன் செய்யும் 'பேட்ட' பட நிறுவனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.

விஸ்வாசம்' டிரைலருக்கு வாழ்த்து கூறிய 'விஜய் 63' தயாரிப்பாளர்

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பல சாதனைகளை தகர்த்து ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்களையும் ஒரு மில்லியனுக்கும் மேல் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது

கொல மாஸ் 'விஸ்வாசம்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' படத்தின் கொல மாஸ் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், இந்த டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் குறித்த அறிவிப்பு

சிம்புவின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங்

ஆக்சன் கிங் அர்ஜூன் சமீபத்தில் வில்லனாக நடித்த 'இரும்புத்திரை' இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இதனையடுத்து அவர் விஜய் ஆண்டனியுடன் 'கொலைகாரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.