close
Choose your channels

கொல மாஸ் 'விஸ்வாசம்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' படத்தின் கொல மாஸ் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், இந்த டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

'விஸ்வாசம்' படத்தின் கொலமாஸ் டிரைலர் நாளை மதியம் 1.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நொடியில் இருந்து அஜித் ரசிகர்கள் 'விஸ்வாசம்' திருவிழாவை ஆரம்பித்துவிட்டனர்.

நாளை மதியம் வெளிவரும் கொலமாஸ் டிரைலர் யூடியூபில் உலக சாதனை செய்தாலும் ஆச்சரியம் அடைவதற்கில்லை. அஜித் ரசிகர்களும், மற்ற சினிமா ரசிகர்களும் இந்த டிரைலரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.