close
Choose your channels

'விஸ்வாசம்' படத்தை புரமோஷன் செய்யும் 'பேட்ட' பட நிறுவனம்

Monday, December 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.

இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இரு நிறுவனங்களின் படங்களும் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' மற்றும் 'பேட்ட படங்களின் புரமோஷன்கள் முதல்' டிரைலர் வரை இரு நிறுவனங்களும் போட்டி போட்டு வெளியிட்டு வருவது தெரிந்ததே. இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் புரமோஷன் சன் மியூசிக் சேனலில் இன்று காலை 11 மணிக்கு வெளிவரவுள்ளது.

ஏற்கனவே சூப்பர்ஹிட் ஆன 'அடிச்சு தூக்கு' பாடலின் லிரிக் வீடியோ இன்று காலை சன் மியூசிக் சேனலில் 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.