close
Choose your channels

சிம்புவின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங்

Sunday, December 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜூன் சமீபத்தில் வில்லனாக நடித்த 'இரும்புத்திரை' இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இதனையடுத்து அவர் விஜய் ஆண்டனியுடன் 'கொலைகாரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' படத்தில் நடிக்க அர்ஜூன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கிய 'மங்காத்தா' படத்தில் அர்ஜூன் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ப்ரவீன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்காக சிம்பு உடலைக் குறைத்து, தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாடு செல்லவுள்ளார். பிப்ரவரி 3-ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.