close
Choose your channels

ஊர்ல இருக்குற பொறுக்கி, பொறம்போக்கு எல்லாம் என்னை தானடா தேடிகிட்டு இருக்கீங்க: விஷாலின் 'லத்தி' டீசர்

Monday, July 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது ஒருநிமிட டீசரில் இருந்து தெரியவருகிறது.

தப்பு பண்ணிட்டு ஓடி ஒளியுற பொறுக்கி உனக்கே இவ்வளவு திமிறு இருந்தா, தப்பு பண்றவங்களை பிடித்து தண்டிக்கிற போலீஸ் நான், எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று விஷால் பேசும் வசனமும், ஊர்ல இருக்குற பொறுக்கி, பொறம்போக்கு எல்லாம் என்னை தானடா தேடிகிட்டு இருக்கீங்க, வாங்கடா, இங்கே இருந்து ஒருத்தன் உயிரோடு போக முடியாது என்று பேசும் வசனமும் டீசரின் ஹைலைட்டாக உள்ளது.

விஷால் ஜோடியாக சுனைனா நடித்து இருக்கும் இந்தப் படத்தை வினோத்குமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரித்திருக்கும் இந்த படம் விஷாலின் வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.