close
Choose your channels

எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னது காலம்.. விஷ்ணு விஷால் பகிர்ந்த ஆச்சரிய புகைப்படம்..

Tuesday, April 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்வது காலம் ஒன்று தான் என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் கூறி ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தந்தைக்கும் நடிகர் சூரிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிலம் வாங்கி தருவது குறித்த பிரச்சனை எழுந்து காவல்துறை, நீதிமன்றம் வரை இந்த பிரச்சனை சென்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த விஷ்ணு விஷால் ’எங்களுக்குள் சமூகமாக இந்த பிரச்சனை முடிந்து விட்டது என்று மனம் திறந்து கூறியதோடு, நண்பர் சூரியை சமீபத்தில் நான் சந்தித்து எல்லா விஷயத்தையும் பேசினேன், எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது, விரைவில் இது குறித்து ஊடகத்துக்கு தெரிவிப்போம் என்று கூறினார்.

மேலும் வாழ்க்கையில் சில குழப்பங்கள் நடந்தால் அதை எப்படி தீர்க்க வேண்டும் என நாம் முயற்சிக்க வேண்டும், நாம் வாழ்வது ஒரு குறுகிய வாழ்க்கை, இதில் பிரச்சனைகள் செய்து கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் சூரியுடன் தானும் தன்னுடைய அப்பாவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். விஷ்ணு விஷால், அவருடைய அப்பா மற்றும் சூரி ஆகிய மூவரும் அன்புடன் சிரித்த முகத்துடன் ஒற்றுமையாக இருக்கும் புகைப்படத்தை பார்த்ததிலிருந்தே அவர்களுக்குள் இருந்த பிரச்சனை முழுவதும் நீங்கிவிட்டது என்று தெரிகிறது.

இந்த புகைப்படத்திற்கு ’எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் பதில் சொல்வது காலம் ஒன்றுதான், இனிமேல் ஒற்றுமையாக இருப்போம் சூரி அண்ணா, லவ் யூ அப்பா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு பலர் பாசிட்டி கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.