close
Choose your channels

டைட்டிலை ரிலீஸ் செய்ய ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிரபல நடிகர்

Friday, April 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் அவர் ஒருபடம் கூட நடிக்கவில்லை என்றாலும் தற்போது அவர் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினார்

இருப்பினும் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்ட அதே தேதியில் அந்த படத்தின் டைட்டில் உள்பட ஒரு சில தகவல்களை வெளியிட தான் விரும்புவதாகவும் ஆனால் அதே நேரத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே வெளியிட இருப்பதாகவும் கூறி வாக்கெடுப்பு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் நடத்தினார்

டைட்டிலை ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? என்று அவர் நடத்திய வாக்கெடுப்பில் 60க்கும் மேற்பட்ட சதவீதத்தினர் டைட்டிலை வெளியிடலாம் என்று கூறியுள்ளதை அடுத்து நாளை விஷ்ணுவிஷாலின் அடுத்த பட டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.