close
Choose your channels

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே: விவேக்

Saturday, December 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:

நான் ஒரு மூன்று எழுத்து சொன்னால் போதும். இந்த மேடையே அதிரும் என்று கூறிவிட்டு ர...ஜி...னி’ என்று விவேக் கூறியது ம் கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. பின்னர் விவேக் தொடர்ந்து, ‘ரஜினி ரசிகன்னா ஒரு லெவல்ல நிறுத்துவான், ரஜினி வெறியன் எப்படி நிறுத்துவான்...

அனிருத் மீது எனக்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அவர் ரொம்ப நல்ல, மனிதாபிமான மனிதர். அவரது அன்பு, பணிவு, மரியாதை அவரை எங்கேயோ நிறுத்தும் என்று நினைத்தேன். தற்போது அது தர்பாரில் வந்து நிற்கின்றது.

ஒரு காலத்தில் ஏவிஎம் நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் திரைப்படங்களை தயாரித்து வந்தன. ஆனால் தற்போது சுப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் உலக நாயகன் படமாக இருந்தாலும் மணிரத்னம் படமாக இருந்தாலும் சரி அது லைகாவின் தயாரிப்பாகவே உள்ளது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் அந்த நிறுவனம் ஒன்றிப்போய்விட்டது

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் அமிதாப்பச்சன் அவர்களே, நான் சூப்பர் ஸ்டார் இல்லை தமிழ்நாட்டில் இருக்கும் ரஜினிதான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார். எனவே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் ரஜினி சாருக்கு மட்டும்தான்.

இவ்வாறு விவேக் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.