close
Choose your channels

முதல்முறையாக உதயநிதியுடன் இணையும் விவேக்?

Monday, August 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது 'கெத்து' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'மான் கராத்தே' பட இயக்குனர் திருக்குமரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உதயநிதி தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கவுள்ளார்.


உதயநிதியின் அடுத்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'ஜாலி எல்.எல்.பி என்ற படத்தின் ரீமேக் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை 'என்றென்றும் புன்னகை' பட இயக்குனர் அஹமது இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் தற்போது ஒப்பந்தமாகி வருகிறனர். ஏற்கனவே இந்த படத்தில் ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ராதாரவி, ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது புதிதாக நகைச்சுவை நடிகர் விவேக் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதி படத்தில் விவேக் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் இந்த படத்தில் காமெடி நடிகராக மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. உதயநிதியின் முதல் மூன்று படங்களில் நடித்த சந்தானம் அடுத்த இரு படங்களிலும் நடிக்கவில்லை என்பதும் கெத்து படத்தில் கருணாகரன் காமெடி வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.