close
Choose your channels

'தல'க்கு பதில் 'தளபதி': சத்யஜோதியுடன் இணையும் சிவா?

Thursday, February 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சிவா, மீண்டும் சத்யஜோதி தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தல அஜித் நடித்த மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கிய சிவா, இம்முறை தளபதி விஜய்யுடன் கைகோர்க்கவிருப்பதாக தெரிகிறது.

அட்லி இயக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் விஜய், பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதேபோல் சிவாவிடமும் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவாவின் அதிரடி ஆக்சன் கதையில் விஜய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், எஸ்.ஜே.சூர்யா, பேரரசு என மிகச்சில இயக்குனர்கள் மட்டுமே அஜித், விஜய் ஆகிய இரண்டு நடிகர்களின் படங்களை இயக்கியுள்ள நிலையில் இந்த பட்டியலில் சிவா இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.