close
Choose your channels

யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் 3 ஹீரோயின்கள்.. அதில் ஒருவர் தமிழ் நடிகை.. கதை இதுவா?

Wednesday, December 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் யாஷ், ‘கேஜிஎப்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு படங்கள் மூலம் உலக புகழ் பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் ’டாக்ஸிக்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் கதை மற்றும் இதில் நடிக்கக்கூடிய நாயகிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

’டாக்ஸிக்’ படத்தில் 3 நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒருவர் தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் இரண்டு நடிகைகள் குறித்த தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன், இலங்கை, கோவா உள்ளிட்ட பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இந்த படத்தில் இதுவரை ஏற்றிராத கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதை உலகளாவிய போதை மருந்து மாஃபியா கும்பல் குறித்த கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

தமிழ், கன்னடம் உள்பட பான் இந்திய திரைப்படமாக உருவாகயிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து தகவல்கள் விரைவில் படிப்படியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.