விஜய் பாணியில் குட்டிக்கதை கூறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த 'கேஜிஎப்' யாஷ்!

தளபதி விஜய் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டிக்கதையை கூறி வரும் நிலையில் அதே பாணியில் ஒரு குட்டிக்கதையை கூறி ‘கேஜிஎப் 2’ பட வெற்றிக்கு உதவிய அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஒரு கிராமத்தில் வறட்சி அதிகமாக இருந்ததால் மழைக்காக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர். அந்த நேரத்தில் எல்லோரும் பிரார்த்தனை கூடத்துக்கு வரும்போது ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அந்த சிறுவனை பார்த்த அனைவரும் முட்டாள்தனம் என்றும் ஓவர்கான்ஃபிடன்ஸ் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த சிறுவன் செய்ததற்குப் பெயர்தான் நம்பிக்கை. தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி அடையலாம் என்று கூறினார்.

மேலும் நான் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. எனக்கு அன்பை வாரி இறைத்த அனைத்து ரசிகர்களுக்கும் ‘கேஜிஎப்’ டீம் சார்பாக நன்றியை கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினேன். இந்த படத்தை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். யாஷின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

'ஓம் ஃபினிஷாய நமஹா': தல தோனியை கொண்டாடும் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள்!

தல தோனி உலகின் மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதும் பல இக்கட்டான போட்டிகளில் இந்திய அணிக்கும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சரி  கடைசி நேரத்தில் எந்தவித பதட்டமும் இன்றி

டிவி முன் துள்ளி குதித்த நடிகர் சூரி: வைரல் வீடியோ

நடிகர் சூரி டிவி முன் துள்ளி குதித்த வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

சமூக வலைத்தளத்தில் இருந்து திடீரென விலகிய விஷ்ணு விஷால்: என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் திடீரென சமூகவலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தாவின் பாய்ஃபிரெண்ட் ஆக மாறிய கிரிக்கெட் வீரர்!

நடிகை சமந்தாவின் பாய் பிரண்டாக கிரிக்கெட் வீரர் மாறிய தகவல் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இன்று முதல் அந்த ஃபேமிலியில் சேர்ந்துவிட்டேன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று முதல் அந்த குடும்பத்தில் சேர்ந்து விட்டேன் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.