close
Choose your channels

எனக்கு 8,822 வயசு.. ராம் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' கிளிம்ப்ஸ் வீடியோ..!

Tuesday, January 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தர் போறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும், ஆனால் ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கும், அது காதல்’ என்ற வசனத்துடன் தொடங்கும் 'ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் ஆங்காங்கே ராம் டச் உள்ளது என்பதும் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரியின் காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

4000 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பாலைவனம், அதில் ஒரு அரண்மனை, அதில் ஒரு பால்கனி, சாயங்காலமா நீங்க அங்க வர்றீங்க, வெளியே இருந்து வரும் காற்று உங்க மேல பட்டுச்சு உங்க முகத்திரை விலகி உங்கள் முகம் தெரிந்தது. முதன் முதலில் நான் உங்களை பார்த்தேன் நீங்க ஒரு ராணி என்பதை உணர்ந்தேன்’ என்ற கவிதைத்தனமாக அஞ்சலியை நிவின்பாலி ரசித்து வர்ணிப்பது சூப்பர்.

இதனை அடுத்து ரயிலில் சென்று கொண்டிருக்கும் சூரியிடம், ‘உங்கள் வயது என்ன? என்று நிவின் பாலி கேட்கும் போது அவர் ’32’ என்று கூறியபோது, ‘எனக்கு 8822 வயது என்று கூறியவுடன் சூரியின் ரியாக்சன் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் சொன்னதை நீங்கள் நம்பி இருக்க மாட்டீர்கள் ஆனால் நான் சொன்னது நிஜம் என்று நிவின்பாலி கூறியவுடன் அதை ரசித்து கேட்டு அஞ்சலி சைக்கிளில் செல்லும் காட்சியும் கவிதைத்தனமாக இருந்தது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நிவின்பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.