close
Choose your channels

அமீர்கானின் 'பிகே' பாணியில் ஒரு தமிழ்ப்படம்: முக்கிய வேடத்தில் யோகிபாபு!

Thursday, May 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமீர்கான் நடித்த ‘பிகே’ பாணியில் ஒரு தமிழ் திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ’பெரியாண்டவர்’ என்ற பெயர் வைத்துள்ளதாகவும் இந்த படத்தில் யோகி பாபு சிவபெருமான் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து இயக்குனர் கண்ணன் கூறிய போது ’காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பின் போதே இந்த படத்தின் ஒன்லைன் கதையை யோகிபாபுவின் கூறினேன் என்றும், அவரும் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறி இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார் .

இந்த படம் கடந்த 1970கள் மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடப்பது போன்று கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் சிவபெருமான் பூமிக்கு வந்து ஒரு பெண்ணை சந்தித்து, அந்த பெண்ணுடன் நடக்கும் உரையாடல் மற்றும் பயணம் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படம் தற்போதைய அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை உள்ளடக்கியது என்றும் தெரிவித்துள்ளார் .

இந்த படத்திற்காக சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அமிர்கானின் ’பிகே’ படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த ஒருவர், அவர் சந்திக்கும் பிரச்சனைகள், கடவுள் குறித்த புரிதல் ஆகியவை சிறப்பாக காட்டப்பட்டு இருந்த நிலையில் அதே பாணியில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.