close
Choose your channels

'தளபதி 65' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

Monday, June 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் ’தளபதி 65’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் சுமார் 25 முதல் 30 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்த செட் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ’தளபதி 65’ படத்தில் யோகி பாபு நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவரே சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது ’தளபதி 65’ படத்தில் நடிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்க்கார் மற்றும் பிகில் ஆகிய படங்களில் நடித்த யோகிபாபு மீண்டும் ஒருமுறை அவருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos