close
Choose your channels

ஆக்ஷன் கிங் வயிற்றில் பஞ்ச் செய்து விளையாடிய தமிழ் நடிகை… வைரல் வீடியோ!

Friday, December 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன் வயிற்றில் பஞ்ச் செய்து பிரபல தமிழ் நடிகை ஒருவர் விளையாடி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்து கடந்த 90களில் இருந்தே “ஆக்ஷன் கிங்“ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன். அவர் இப்போதும் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடப் படங்களில் இவர் வரவேற்பு கொண்ட நடிகராக இருந்து வருகிறார்.

இதையடுத்து தற்போது நடிகர் மோகன் லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “மரக்கர்“ படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. இதைத்தவிர ஜீ தொலைக்காட்சியில் நடத்தப்படும் “சர்வைவர்“ எனும் பிரபல ரியாலிட்டி ஷோவையும் இவர் தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் வயிற்றில் நடிகை நிக்கி கல்ராணி செல்லமாக பஞ்ச் செய்து விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே லைக்ஸ்களை குவித்து வருகிறது. தமிழ், கன்னடம் மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை நிக்கி கல்ராணி நடிகர் சசிக்குமாருடன் இணைந்து நடித்த “ராஜ வம்சம்“ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது.

மேலும் “இடியட்“ எனும் திரைப்படங்களில் அவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி, நடிகர் அர்ஜுன் வயிற்றில் பஞ்ச் செய்து விளையாடும் வீடியோ சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.