close
Choose your channels

சுயஇன்ப வீடியோ அனுப்பிய இளைஞர் மீது காமெடி நடிகை எடுத்த அதிரடி நடவடிக்கை!

Saturday, December 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுய இன்பம் வீடியோ அனுப்பிய இளைஞர் ஒருவர் மீது காமெடி நடிகை ஒருவர் அதிரடி நடவடிக்கை எடுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிரபல பாலிவுட் காமெடி நடிகை அஞ்சல் அகர்வால். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் இவருக்கு இளைஞர் ஒருவர் சுய இன்ப வீடியோவை அனுப்பியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை அஞ்சல் அகர்வால், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோவை பார்த்த நடிகையின் ஃபாலோயர்களில் ஒருவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அனுப்பியுள்ளார். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த இளைஞரை பிடித்த நிலையில் அந்த இளைஞர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் இது குறித்த தகவலை நடிகை அஞ்சல் அகர்வாலிடம் தெரிவித்தபோது அந்த நபர் தன்னிடம் நேரடியாக வீடியோ மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இளைஞர் வீடியோ மூலம் நடிகையிடம் மன்னிப்பு கேட்டார். இது குறித்து அந்த அஞ்சல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘இந்த மனிதர்கள் எல்லாவற்றிலும் மிகவும் பயந்த இனம். அதனால்தான் அவர்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர இந்த நிலைக்குச் செல்கிறார்கள். தகவலறிந்த ஒரு நபர் அந்த நடவடிக்கையை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சைபர் செல் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததும் மகிழ்ச்சியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.