close
Choose your channels

இயக்குனருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய யுவன்

Friday, August 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான யுவன்ஷங்கர் ராஜாவின் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு இளைஞர்களின் கூட்டம் அலைமோதுவதால் வெளியான அனைத்து இடங்களிலும் திருப்தியான வசூலை செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் இளன் அவர்களுக்கு தயாரிப்பாளரான யுவன்ஷங்கர் ராஜா, கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த பரிசு குறித்து இயக்குனர் இளன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'எனக்கு கார் பரிசு தருவதாக இந்த படம் வெற்றி பெற்றவுடன் அவர் என்னிடம் கூறவில்லை, இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அவர் எனக்கு கொடுத்த வாக்குறுதிதான் இது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றிய யுவனின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது நன்றி என்று கூறியுள்ளார்.

ஒரு இயக்குனருக்கும், ஒரு தயாரிப்பாளருக்கும் முதல் பட வெற்றி என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் இயக்குனராக இளன் மற்றும் தயாரிப்பாளராக யுவன் ஆகிய இருவரும் பெற்ற வெற்றி அடுத்தடுத்து அவர்களிடம் இருந்து நல்ல படம் வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.