close
Choose your channels

'மெர்சல்' ஆடியோ விழாவில் இன்ப அதிர்ச்சி தரும் ஏ.ஆர்.ரஹ்மான்

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பொதுவாக விஜய் படங்களின் ஆடியோ விழா என்றாலே களைகட்டும் என்பது தெரிந்தது. ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதாலும், இந்த படம் தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம் என்பதாலும் இசைவிழாவில் கூடுதல் பிரமாண்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சற்றுமுன்னர் வெளிவந்த தகவலின்படி இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், மேடையிலேயே இந்த படத்தின் ஒரிரண்டு பாடல்களை பாடுவார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.