close
Choose your channels

விஜய் 59: விஜய்யுடன் ஜோடி சேரும் மலையாள பெண்?

Saturday, November 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் நாயகியான சமந்தா காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மற்றொரு நாயகியான எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் எமிஜாக்சன் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. எமி, இந்த படத்தில் கேரள பெண்ணாக நடிக்கின்றாராம். எமிஜாக்சன் ஏற்கனவே மலையாள பெண்ணாக கவுதம் மேனனின் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக் படமான 'EK Deewana Tha' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். விஜய்யின் 59வது படமான இந்த படம் ஜி.வி.பிரகாஷூக்கு 50வது படமாக அமைந்துள்ளது என்பது ஒரு கூடுதல் சிறப்பு. இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.