close
Choose your channels

அரவிந்தசாமியின் முனிவர் முடிவு ஏன்?

Wednesday, April 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரோஜா, பம்பாய் போன்ற பல படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்ற நடிகர் அரவிந்தசாமி கடந்த ஆண்டு வெளியான 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் பெற்றதை அடுத்து மீண்டும் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கின்றார்.


இந்நிலையில் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து தற்போது அரவிந்தசாமி 'போகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு என்ன கேரக்டர் என்று இதுவரை தெரியாத நிலையில் தற்போது அவர் நடித்து வரும் கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

போகன்' படத்தில் அரவிந்தசாமி முனிவராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்தசாமி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடைபெற்று முடிந்து தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.