close
Choose your channels

தனுஷின் 'விஐபி 2' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், அமலாபால் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று இரவு 7 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்
இதன்படி சற்று முன்னர் தனுஷின் சமூக வலைத்தளத்தில் வெளியான புதிய 'விஐபி 2' படத்தின் டீசர் மூலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் இந்த படம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏற்கனவே ஆகஸ்ட் 11ஆம் தேதி சுமார் 8 படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தேதியில் தனுஷின் 'விஐபி 2' திரைப்படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.