close
Choose your channels

பாண்டிராஜ்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படம்: முக்கிய தகவல்கள்

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற 'பசங்க' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாண்டிராஜ். சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படத்திற்கு பின்னர் சமீபத்தில் ஒரு படத்தை அவர் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.

பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்த வள்ளிகாந்த் என்பவர் இயக்கும் இந்தப் படத்துக்கு செம` என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக ஆர்த்தனா என்ற கேரள பெண் அறிமுகமாகும் இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளதாகவும், முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜனா என்ற புதிய வில்லன் நடிகரை அறிமுகம் செய்வதாகவும் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். பாண்டிராஜின் பசங்க புரடொக்ஷன்ஸ் மற்றும் பி.ரவிச்சந்திரன் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடந்துவந்த படப்பிடிப்பு இப்போது முடியும் நிலையை எட்டிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.